Page Loader
கடைசி தேதிக்குப் பிறகு ITR தாக்கல் செய்பவர்களிடம் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்படும்?

கடைசி தேதிக்குப் பிறகு ITR தாக்கல் செய்பவர்களிடம் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்படும்?

எழுதியவர் Sindhuja SM
Jul 16, 2024
06:17 pm

செய்தி முன்னோட்டம்

2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2024 ஆகும். அதாவது இம்மாத இறுதியோடு இது முடிவடைகிறது. ஜூலை 31 என்ற காலக்கெடுவைத் தவறவிட்ட வரி செலுத்துவோர், கடந்த நிதியாண்டு மற்றும் இந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பர் 31, 2024க்குள் தாக்கல் செய்யலாம். இந்த ஆண்டு இறுதி வரை ஐடிஆரைத் தாக்கல் செய்யலாம் என்றாலும், காலக்கெடுவுக்கு பிறகு தாக்கல் செய்தால் தாமதத்தை பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்தியா 

எவ்வளவு அபராதம் வசூலிக்கப்படும்?

2023-24 (AY 2024-25) நிதியாண்டில் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக வரி விதிக்கக்கூடிய வருமானம் வாங்கிய தனிநபர்களுக்கு, ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வருமானம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.1000 மட்டுமே அபராதம் விதிக்கப்படும். மேலும், ஐடிஆர் தாக்கல் செய்வதை எவ்வளவு நீங்கள் தாமதப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு வரி விலக்குகளை நீங்கள் இழக்க நேரிடும். மேலும் வருமான வரித் துறையின் கூடுதல் ஆய்வுக்கு நீங்கள் உட்படுத்தப்படலாம். உங்களின் வருமானம் / சம்பளம் அடிப்படை விலக்கு வரம்பை மீறினால், நீங்கள் கண்டிப்பாக ஐடிஆரை தாக்கல் செய்ய வேண்டும்.