
நாம் பெறும் தீபாவளிப் பரிசுக்கும் வரி செலுத்த வேண்டுமா? வருமான வரிச் சட்டம் சொல்வது என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட எந்தவொரு பண்டிகை நாளின் போதும் உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பரிசுப்பொருள் பெறுவதும் கொடுப்பதும் வழக்கம் தான். இதுவரை பரிசுப் பொருட்கள் பெரும் போது பெரிதாக எதையும் கவனித்திருக்க மாட்டோம்.
ஆனால், இந்தியாவில் பரிசுப் பொருட்கள் பெறுவது குறித்து சில வரையறைகளைக் கொண்டிருக்கிறது இந்திய வருமான வரிச் சட்டம்.
ஆம், இந்தியாவில் நாம் யாரிடமிருந்து, எவ்வளவு மதிப்புடைய, என்ன வகையான பரிசுப் பொருளைப் பெறுகிறோம் என்பது குறித்து வருமான வரிச் சட்டத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. அதன்படி நாம் வாங்கும் பரிசுப் பொருளுக்கும் வரி செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
சரி எப்போதெல்லாம் நாம் வாங்கும் பரிசுப் பொருளுக்கு வரி செலுத்த வேண்டும்? பார்க்கலாம்.
தீபாவளிப் பரிசு
எப்போது பரிசுப் பொருளுகுக்கு வரி செலுத்த வேண்டும்?
நாம் நம்முடைய உறவினர்களிடமிருந்து பரிசுப் பொருட்களைப் பெற்றால், அதற்கு எந்த விதமான வருமான வரியும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், உறவினர்கள் அல்லாதோரிடமிருந்து ஒரு ஆண்டில் ரூ.50,000-க்கும் மேல் மதிப்புடைய பரிசுப் பொருட்களைப் பெறும் போது அதற்கு வரி செலுத்த வேண்டும்.
உறவினர்கள் மற்றும் உறவினர் அல்லாதோர் என்ற குறிப்புகளுக்கும் வருமான வரிச் சட்டத்தில் வரையறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
நம்முடைய பெற்றோர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், நம்முடைய மனைவி, நம் உடன்பிறந்தோர், நம் குழந்தைகள், பேரக் குழந்தைகள், அவர்கள் வழி வந்தவர்கள் மற்றும் அவர்களது கணவன்/மனைவிமார்கள், இவர்களிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருட்கள் மட்டுமே உறவினர்களிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருட்களாக வருமான வரிச் சட்டத்தின் கீழ் கருதப்படும்.
வருமான வரிச் சட்டம்
உறவினர் அல்லாதோரிடமிருந்து பெரும் பரிசுப்பொருள்:
மேற்கூறியது உறவினர்கள் தவிர்த்து பிறரிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருட்கள் அனைத்துமே உறவினர் அல்லாதோரிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருட்களாகவே வருமான வரிச் சட்டத்தின் கீழ் கருத்தில் கொள்ளப்படும்.
அப்படி உறவினர் அல்லாதோரிடமிருந்து ஒரு ஆண்டில் ரூ.50,000-க்கும் மேல் மதிப்புடைய பரிசுப் பொருட்களைப் பெற்றால், அந்த ரூ.50,000 மதிப்பிற்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டும்.
அப்படி வருமான வரி செலுத்தாத அல்லது நாம் பெற்ற பரிசுப் பொருட்களை வருமான வரித் தாக்கலின் போது குறிப்பிடாத பட்சத்தில் அதற்கு நாம் பெற்ற பரிசுப் பொருளின் மதிப்பை விட 200% அபராதம் செலுத்த நேரிடும்.
இந்தியா
வருமான வரித் தாக்கலின் போது குறிப்பிட வேண்டியது அவசியம்:
மேற்கூறிய உறவினர்களிடமிருந்தும் பணம் மற்றும் அசையாச் சொத்து தவிர்த்து பிற எவ்வித பரிசுப் பொருளையும் எவ்வளவு மதிப்பிற்கும் பெற்றுக் கொள்ளலாம்.
நாம் பெரும் பரிசுப் பொருள் பணமாகவோ, அசையாச் சொத்தாகவோ இருக்கும் பட்சத்தில் அது உறவினர்களிடமிருந்து பெறப்பட்டிருந்தாலும் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டியது அவசியம்.
உறவினர்களிடமிருந்து நாம் பெரும் பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ.50,000 அல்லது அதற்கு மேல் இருக்கும்ப பட்சத்தில், அதற்கு வருமான வரி செலுத்த தேவையில்லை என்றாலும், அதனையும் வருமான வரித் தாக்கலின் போது குறிப்பிட வேண்டியது அவசியம்.
அப்படிக் குறிப்பிடத் தவறும் பட்சத்தில், அதன் மதிப்பை விட 200% அபராதம் செலுத்த நேரிடும். இது தான் இந்தியாவில் பரிசுப் பொருட்கள் குறித்து வருமான வரிச் சட்டம் கூறுகிறது.