
எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது?
செய்தி முன்னோட்டம்
வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இரண்டு வழிகளில் அதனைச் செய்யலாம். இணையவழி வருமான வரித் தாக்கல் மற்றும் நேரடி வருமான வரித் தாக்கல் என இரண்டு வழிகளில் செய்ய முடியும். இதில் எது சிறந்த வழி?
நேரடி வருமான வரித் தாக்கல்:
இந்த வழியில், நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய நேரடியாக வருமான வரி அலுவலகத்திற்கு சென்று தாக்கல் செய்ய வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தையும் கையில் கொண்டு செல்ல வேண்டும்.
வருமான வரித் தாக்கலுக்கான படிவங்களை சரியாகப் பிழையில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். பிழை ஏற்பட்டால் திருத்துவது கடினம்.
இந்த செயலாக்கம் நிறைவடைந்து, வருமான வரித் தாக்கல் செய்ததற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற நீண்ட நேரம் ஆகும்.
வருமான வரி
இணையவழி வருமான வரித் தாக்கல்:
இணையத்தின் மூலம் வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ வருமான வரி இணையதளத்தின் (Incometax.gov.in) மூலம் வருமான வரித் தாக்கல் செய்துவிட முடியும்.
நேரடி வருமான வரித் தாக்கல் முறையை விட இணையவழியில் நீங்கள் வேகமாக செயல்முறையை முடித்துவிடலாம். பிழைகள் ஏற்பட்டாலும் திருத்துவது எளிது.
வருமான வரித் தாக்கல் செய்த பின் உங்களுக்கான ஒப்புகை எண் உடனடியாக வழங்கப்பட்டுவிடும். அதனைக் பின்னாளில் தேவையெனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இணையவழியில் வருமான வரித் தாக்கல் செய்வதன் மூலம் அதனை செய்ததற்கான டிஜிட்டல் பதிவுகள் தாமாகவே பதிவாகிவிடும். தேவைப்படும் போது அதனையும் நீங்கள் எளிதாக அணுகி பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே, நேரடி வருமான வரித் தாக்கலை விட இணையவழி வருமான வரித் தாக்கல் முறையே சிறந்தது.