யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாய் மீது எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் யூடியூப் தளத்தைப் பயன்படுத்தி வருவாயை உருவாக்குபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது. மலிவான விலையில் கிடைத்த இணைய வசதி, அதிகரித்த ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகியவை இந்தியாவில் யூடியூபின் தற்போதைய வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. சரி, எந்த வகையில் வருவாய் நமக்கு வந்தாலும், அதற்கு வரி செலுத்த வேண்டியது அவசியம். இந்த யூடியூபில் இருந்து பெறப்படும் வருவாய்க்கு எதன் அடிப்படையில் வரி வதிக்கப்படுகிறது? முதலில் யூடியூப் மூலம் நாம் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறோம், எப்படி ஈட்டுகிறோம் என்பதைப் பொறுத்து, அந்த வருவாய் மீது விதிக்கப்படும் வரியும் மாறுபடும். அடிப்படையில் யூடியூபில் இருந்து பெறப்படும் அனைத்து விதமான வருவாய்க்கும் 18% (9%CGST மற்றும் 9% SGST) வரி விதித்திருக்கிறது மத்திய அரசு.
எப்படி வரி விதிக்கப்படுகிறது?
யூடியே நம்முடைய பிரதான வருவாய்க்கான வரியாக இருக்கும் பட்சத்தில், அதன் மீது 'வணிகம் அல்லது தொழில் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயம்' என்ற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும். அதிலும், யூடியூபில் நாம் பதிவிடும் காணொளிகளைத் தயாரிக்கத் தனி நிபுணத்துவம் அல்லது பயிற்சி தேவைப்படும் எனில் அது தொழிலின் கீழும், இல்லையெனில் வணிகத்தின் கீழும் பெறப்படும் வருவாயாகக் கருதப்படும். யூடியூப் மூலம் நாம் பெறும் வருவாய் நம்முடைய முதன்மையாக வருவாயாக இல்லாமல், குறைந்தபட்சமாக ஒரு பகுதி நேர வேலை மூலமாக கிடைக்கும் வருவாயாக இருக்கும் பட்சத்தில், 'பிற மூலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய்' என்ற பிரிவின் கீழ் அதன் மீது வரி விதிக்கப்படும்.