கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை கடந்த ஜூலை 31-ம் தேதி டன்னுக்கு ரூ.1,600-ல் இருந்து ரூ.4,250 ஆக உயர்த்தியது மத்திய அரசு. தற்போது இன்று முதல் மீண்டும் கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
இன்று முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை டன்னுக்கு ரூ.4,250-ல் இருந்து, ரூ.7,100 ஆக உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
அதேபோல் டீசல் மீது ரூ.1 விண்டுஃபால் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூ.5.50 ஆக தற்போது உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.
விண்டுஃபால் வரி
விண்டுஃபால் வரி என்றால் என்ன?
கச்சா எண்ணெய் டீசலைத் தொடர்ந்து, ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் மீதான விண்டுஃபால் வரியையும் பூஜ்யத்தில் இருந்து ரூ.2 ஆக அதிகரித்திருப்பதாக தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது மத்திய அரசு.
ஆனால், பெட்ரோல் மீது மேற்கூறியது போல் கூடுதல் வரி எதுவும் தற்போது விதிக்கப்படாமல், பூஜ்யம் கூடுதல் வரியுடனேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மீதான சராசரி விலையை கடந்த இரு வார விலைகளுடன் ஒப்பிட்டு, கூடுதல் லாபம் வரும் பட்சத்தில், அதன் மீது விண்டுஃபால் வரியை விதித்து வருகிறது மத்திய அரசு.
ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை, இந்த விண்டுஃபால் வரியானது முந்தைய சராசரி விலைக்கேற்ப கூட்டப்படும் அல்லது குறைக்கப்படும்.