பான்-ஆதார் இணைப்பு காலக்கெடுவை தவறவிட்டீர்களா? அடுத்து என்ன செய்யவேண்டும்?
செய்தி முன்னோட்டம்
PAN மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 ஆகும். வருமான வரித் துறை இன்னும் இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதாவது, நீங்கள் இப்போது உங்கள் PAN மற்றும் ஆதாரை இணைக்கவில்லை என்றால், இன்று முதல் உங்கள் PAN செயலற்றதாகிவிடும். உங்கள் PAN அட்டையின் நிலையை சரிபார்க்க, நீங்கள் வருமான வரித் துறையின் e-filing போர்ட்டலை பார்வையிட்டு உங்கள் விவரங்களை உள்ளிடலாம்.
செயல்முறை
உங்கள் பான் நிலையை ஆன்லைனில் எவ்வாறு சரிபார்ப்பது
உங்கள் PAN கார்டு இன்னும் செயல்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்க்க, e-filing போர்டல் முகப்பு பக்கத்திற்கு சென்று "Verify Your PAN" என்பதை கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் உங்கள் PAN, முழுப் பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் (உங்களுக்கு அணுகல் உள்ளது) ஆகியவற்றை உள்ளிடவும். அதன் பிறகு, இந்த மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஆறு இலக்க OTP-ஐ 15 நிமிடங்களுக்குள் உள்ளிடவும். வெற்றி பெற்றால், உங்கள் PAN செயலில் உள்ளதா இல்லையா என்பதை அது உங்களுக்கு காண்பிக்கும்.
செயல்படாத PAN
செயல்படாத PAN-ஐ மீண்டும் செயல்படுத்துவதற்கான படிகள்
இணைக்கப்படாததால் உங்கள் பான் கார்டு செயலிழந்துவிட்டால், அதிகாரப்பூர்வ போர்ட்டலில் உள்ள e-Pay வரி விருப்பத்தின் மூலம் ₹1,000 அபராதம் செலுத்தி அதை மீண்டும் செயல்படுத்தலாம். அபராதம் செலுத்திய பிறகு, உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பை தொடரலாம். வழக்கமாக status 7-30 நாட்களுக்குள், 'Inoperatove' என்பதிலிருந்து 'active' என்று மாறும். இருப்பினும், இந்த காலகட்டத்தில், மூலத்தில் கழிக்கப்படும் அதிக வரி (TDS) விகிதங்கள் தொடர்ந்து பொருந்தும்.
விலக்கு
ஏதேனும் விலக்கு கிடைக்குமா?
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), மிகவும் மூத்த குடிமக்கள் மற்றும் ஆதார் சட்டங்களின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள் போன்ற சில வகை தனிநபர்கள், ஆதாருடன் PAN எண்ணை இணைக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், விலக்குக்கான தகுதி கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் வரி செலுத்துவோர் தாங்கள் விலக்கப்பட்டதாக கருதுவதற்கு முன்பு தங்கள் நிலையை கவனமாக சரிபார்க்க வேண்டும்.