வருமான வரித்தாக்கல் மற்றும் பிழைத்திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்யத் தவறியவர்கள் மற்றும் வருமான வரித்தாக்கலில் பிழைத்திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கான கடைசி நாளாக டிசம்பர்-31ஐ முன்பே அறிவித்திருந்தது வருமான வரித்துறை. 2023, ஜூலை-31க்குள் வருமான வரித்தாக்கல் செய்யத் தவறியவர்கள் மற்றும் வரித்தாக்கலில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் இன்றைக்குள் செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. தாமதமாக வருமான வரித் தாக்கல் செய்வர்கள் மற்றும் முந்தைய வரித்தாக்கலின் போது குறிப்பிட்ட வருவாய் விபரங்களைக் குறிப்பிடாதவர்கள், பிரிவு 234F-ன் படி அபராதத்துடன் வரித்தாக்கல் செய்ய நேரிடும். ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் கொண்டவர்கள் ரூ.5,000 அபராதத்துடனும், அதற்குக் கீழுள்ளவர்கள் ரூ.1,000 அபராதத்துடனும் இன்று இரவுக்குள் திருத்தப்பட்ட அல்லது தாமதமான வருமான வரித்தாக்கலை செய்து கொள்ளலாம்.