LOADING...
கடைசி தேதி நெருங்குகிறது: ITR தாக்கல் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள் 

கடைசி தேதி நெருங்குகிறது: ITR தாக்கல் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sindhuja SM
Jul 06, 2024
05:23 pm

செய்தி முன்னோட்டம்

2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2024 ஆகும். அதாவது இம்மாத இறுதியோடு இது முடிவடைகிறது. ஜூலை 31 என்ற காலக்கெடுவைத் தவறவிட்ட வரி செலுத்துவோர், கடந்த நிதியாண்டு மற்றும் இந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பர் 31, 2024க்குள் தாக்கல் செய்யலாம். இந்த ஆண்டு இறுதி வரை தாமதமாக ஐடிஆரைத் தாக்கல் செய்யலாம் என்றாலும், காலக்கெடுவுக்கு பிறகு தாக்கல் செய்தால் தாமதத்தை பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்தியா 

வரி விலக்கை இழக்காமல் இருக்க ITR பதிவு செய்யுங்கள் 

மேலும், ஐடிஆர் தாக்கல் செய்வதை எவ்வளவு நீங்கள் தாமதப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு வரிக்கான சில விலக்குகளை நீங்கள் இழக்க நேரிடும். மேலும் வருமான வரித் துறையின் கூடுதல் ஆய்வுக்கு நீங்கள் உட்படுத்தப்படலாம். உங்களின் வருமானம் / சம்பளம் அடிப்படை விலக்கு வரம்பை மீறினால், நீங்கள் கண்டிப்பாக ஐடிஆரை தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி நோக்கங்களுக்காக நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் அல்லது இந்தியாவிற்கு வெளியே ஏதேனும் சொத்துக்கள் உங்கள் பெயரில் இருந்தால் அல்லது இந்தியாவிற்கு வெளியே உள்ள எந்தவொரு சொத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.