
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 30 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை
செய்தி முன்னோட்டம்
சென்னையில் இன்று அதிகாலை முதல், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் போன்ற 30 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இதில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் இருக்கும், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் என்று குறிப்பிடப்படும் காசி என்பவரது வீடும் அடங்கும்.
காசி, மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் ஓய்விற்கு பின்னர், செந்தில் பாலாஜியிடம் சிலகாலம் உதவியாளராக பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த திடீர் ரைடில், சென்னையில் மட்டுமே 10 இடங்களில் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வருமானவரி துறையினர் சோதனை
#BREAKING || தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
— Thanthi TV (@ThanthiTV) September 20, 2023
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
தொழிலதிபர்களை மையப்படுத்தி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்#itraid | #tamilnadu | #chennai pic.twitter.com/KPaVQdHqyJ