புதிய வருமான வரி மசோதா: வரி அதிகாரிகள் உங்கள் மின்னஞ்சல், சமூக ஊடகங்களை அணுகலாம்
செய்தி முன்னோட்டம்
புதிய வருமான வரி மசோதா பற்றி சமீபத்திய செய்தி உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துவது பற்றியது என்று அரசாங்கம் கூறினாலும், இந்த மசோதாவிற்குள் புதைந்து கிடக்கும் ஒரு விதி, வரி அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் ஒரு விதியாகும்.
இந்த விதி, வரி விசாரணைகளின் போது மின்னஞ்சல்கள், வர்த்தக கணக்குகள், சமூக ஊடக சுயவிவரங்கள் மற்றும் பலவற்றை ஆராய அனுமதிக்கிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதா, 2025 ஐ கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
ஆனால் அது சட்டமாக மாறுவதற்கு முன்பு, ஒரு தேர்வுக் குழு அதை மதிப்பாய்வு செய்யும் எனக்கூறினார்.
அதிகாரம்
வருமான வரி அதிகாரிகளுக்கு அதிகாரம்
தற்போது, வரி அதிகாரிகள் லேப்டாப்கள், ஹார்டு டிரைவ்கள் மற்றும் மின்னஞ்சல்களுக்கான அணுகலைக் கேட்கலாம். ஏனெனில் தற்போது நடைமுறையிலுள்ள வரிச் சட்டம், டிஜிட்டல் பதிவுகளை வெளிப்படையாகக் குறிப்பிடுவதில்லை.
இருப்பினும், புதிய மசோதா அந்த குறையை தெளிவுபடுத்துகிறது: வரி அதிகாரிகள் டிஜிட்டல் சொத்துக்களை அணுகுமாறு கோரலாம்.
வரி செலுத்துவோர் மறுத்தால் கூட, அவர்களால் கடவுச்சொற்களைத் தவிர்த்து, பாதுகாப்பு அமைப்புகளை மீறி, கோப்புகளைத் திறக்கலாம்.
புதிய வருமான வரி மசோதாவின் பிரிவு 247இன் படி, இந்தியாவில் நியமிக்கப்பட்ட வருமான வரி அதிகாரிகள், வரி ஏய்ப்பு அல்லது வரி செலுத்தப்படாத வெளியிடப்படாத சொத்துக்கள் இருப்பதாக சந்தேகித்தால், ஏப்ரல் 1, 2026 முதல், உங்கள் மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள், வங்கி விவரங்கள் மற்றும் முதலீட்டு கணக்குகளை அணுக உரிமை பெறுவார்கள்.
சட்டம்
தனிப்பட்ட தரவுகளின் தேவையற்ற ஆய்வுக்கு வழிவகுக்கும் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்
வரி செலுத்துவோரின் "மெய்நிகர் டிஜிட்டல் இடத்தில்" சேமிக்கப்படும் எதையும் அதிகாரிகள் சுதந்திரமாகப் பயன்படுத்துவார்கள்.
இந்த மசோதா, கிளவுட் சர்வர்கள், மின்னஞ்சல் கணக்குகள், சமூக ஊடகங்கள் மற்றும் வர்த்தக தளங்கள் உள்ளிட்ட கணினிகள் வழியாக பயனர்கள் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் தளங்களாக இந்த வார்த்தையை வரையறுக்கிறது.
சட்ட வல்லுநர்கள் இதில் மகிழ்ச்சியடையவில்லை. கடுமையான பாதுகாப்புகள் இல்லாமல், இந்த புதிய அதிகாரங்கள் துன்புறுத்தலுக்கும் தனிப்பட்ட தரவுகளின் தேவையற்ற ஆய்வுக்கும் வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதே நேரத்தில், வரி அதிகாரிகள் முன்பு டிஜிட்டல் சாதனங்களை அணுகக் கோரியிருந்தாலும், சட்டம் அதை வெளிப்படையாக ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
புதிய மசோதா அந்த குறையை நீக்குகிறது. இதனால் வரி செலுத்துவோர் அணுகலை ஒப்படைக்க சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுகிறார்கள்.