என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தது. இதன் விசாரணை நடந்து வரும் நிலையில், இன்று(ஆகஸ்ட்.,22) மீண்டும் நீதிபதி தண்டபாணி முன்னர் விசாரணைக்கு வந்துள்ளது. இருதரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் மீது அடுத்த 8 வாரங்களில் மத்திய அரசு முடிவு எடுத்தாகவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தங்கள் கோரிக்கைகள் குறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் 2 வாரங்களில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு அதில் முடிவெடுக்கும் வரையில் எவ்வித போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.