Page Loader
டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் 
டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்

டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் 

எழுதியவர் Nivetha P
Aug 24, 2023
07:04 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 மாநாடு இம்முறை இந்தியாவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டின் நிகழ்வுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த நிலையில், முதன்மையான மாநாடடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மிக பிரம்மாண்டமாக டெல்லியில் தற்போது நடந்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மாநாடு 

டெல்லி உச்சி மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்

இந்நிலையில், டெல்லியில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் செப்டம்பர் 8, 9 மற்றும் 10 தேதிகளில், 3 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை மத்திய பணியாளர்கள், பொதுத்துறை மற்றும் ஓய்வூதியத்துறை இணைந்து இன்று(ஆகஸ்ட்.,24) வெளியிட்டுள்ளது. இதனிடையே டெல்லி மாநில அரசு நேற்று(ஆகஸ்ட்.,23) தெரிவித்த அறிவிப்பு என்னவென்றால், செப்டம்பர் 8 முதல் 10 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வி நிறுவனங்கள், டெல்லி அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நிதி நிறுவனங்கள் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்டவை அனைத்தும் இயங்காது என்பதாகும். டெல்லியில் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.