
மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில், அடுத்த வருடம், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் கட்சியான பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் தங்களது வேட்பாளர்களை அறிவித்தும் விட்டனர்.
அதேபோல எதிர்கட்சியினரும் தங்கள் பங்கிற்கு, கூட்டணியின் பெயர் மாற்றத்துடன், தங்களின் தேர்தல் வியூகத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில். பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார், இந்தாண்டின் இறுதிக்குள், தேர்தலை நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தான் அனுமானிப்பதாக நேற்று தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்து பேசிய நிதிஷ் குமார், இதனை தெரிவித்துள்ளார். "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காரணமாக, அதிக தொகுதிகளில் தோல்வி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் மத்திய அரசு அவ்வாறு நடத்தக்கூடும்" என அவர் மேலும் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு
Nitish Kumar: BJP may advance Lok Sabha polls due to fear of losses from Oppn unity, ahead of I.N.D.I.A meet in Mumbai.#BJP #Opposition #LokSabhaPolls #NitishKumar https://t.co/s7S55cCrHm
— Deccan Chronicle (@DeccanChronicle) August 30, 2023