
'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் இன்றைய ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளால் சில ஆண்டுகளில் பெரும் நடுத்தர வர்க்க மக்களை கொண்ட சமூகமாக இந்தியா மாறும் என டெல்லியில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மேலும், இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு உந்தித் தள்ளும் என மோடி அப்போது கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசின் ஏழைகளுக்கான கொள்கையால், அவர்கள் மிக வேகமாக நடுத்தர வர்க்கத்தினராக மாறி வருகிறார்கள்.
இதனால் இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை மிகவும் அதிகரிப்பதோடு, அவர்களின் வாங்கும் சக்தியின் அதிகரிப்பு வணிகங்களின் வளர்ச்சிக்கும் உதவி செய்யும்." என்று கூறினார்.
B20 summit background
பி20 உச்சிமாநாடு எதற்காக நடத்தப்படுகிறது?
வணிகம் 20 (பி20) என்பது உலகளாவிய வணிக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஜி20 உரையாடல் மன்றங்களில் ஒன்றாகும். இது ஜி20 கூட்டமைப்பின் ஒரு அங்கமாக 2010இல் நிறுவப்பட்டது.
ஜி20இல் மிகவும் முக்கியமான குழுக்களில் ஒன்றாக விளங்கும் பி20இல், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பங்கேற்பாளர்களாக உள்ளன.
இது உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதோடு, ஜி20இன் வணிகம் தொடர்பான கொள்கை வகுப்புக்கு ஆலோசனை வழங்குகிறது.
இந்த ஆண்டு பி20 ஆனது ஜி20க்கு 54 பரிந்துரைகளையும் 172 கொள்கை ரீதியிலான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.