சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(ஆகஸ்ட் 12) ஒப்புதல் அளித்தார்.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு(திருத்தம்) மசோதா, ஜன் விஸ்வாஸ்(விதிமுறைகளில் திருத்தம்) மசோதா மற்றும் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா ஆகியவை இன்று சட்டமாக்கப்பட்டது.
தற்போது சட்டமாகி இருக்கும் இந்த மசோதாக்களில் குறைந்தபட்சம் இரண்டு மசோதாக்களுக்காவது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன.
முக்கியமாக, டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும், மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்கும் தேசிய தலைநகர் பிரதேச அரசு(திருத்தம்) மசோதாவுக்கு INDIA எதிர்க்கட்சி கூட்டணி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
டிஜிக்
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டமாகியது டெல்லி சேவைகள் மசோதா
டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்குமான அதிகாரம் இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்திடம் தான் இருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது.
அந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலையிலான டெல்லி அரசுக்கு தான், டெல்லியில் அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும் அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு மத்திய அரசின் பிரதிநிதியான டெல்லி துணைநிலை ஆளுநருக்கு எதிராக வந்திருந்தது.
இதனையடுத்து, மத்திய அரசு ஒரு புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்து, அரசாங்க அதிகாரிகளின் சேவைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை டெல்லி துணைநிலை ஆளுநருக்கு வழங்கியது.
இந்நிலையில், தற்போது அந்த அவசர சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டிருக்கிறது.