மத்திய அரசு: செய்தி
மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி காக்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 140 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.
சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்
பெண்களின் சடலம் பலாத்காரம் செய்யப்படுவதை(நெக்ரோபிலியா) இந்திய தண்டனைச் சட்ட(ஐபிசி) பிரிவு 375 குற்றமாக கருதாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள்
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முற்றிலும் மாறுபட்ட பாடப்புத்தகங்களை விரைவில் பெற இருக்கிறார்கள்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்திய ஓலா நிறுவனம்.. எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது?
FAME-II திட்டத்தின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் பைக்குளின் பேட்டரி அளவில் ஒரு kWh-க்கு ரூ.15,000 வீதம், ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தின் விலையில் 40% வரை மானியம் வழங்கி வந்தது மத்திய அரசு.
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு
இந்தியா சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவையின் அடிப்படையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு விலையினை நிர்ணயம் செய்து வருகிறது.
'மோடி அரசு எனது மொபைலை ஒட்டு கேட்கிறது': ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாஜக அரசு தனது மொபைலை ஒட்டு கேட்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்: மத்திய அமைச்சர்
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்ததாக ANI கூறியுள்ளது.
தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது.
எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.30,000 வரை உயர்த்திய மேட்டர் எனர்ஜி.. ஏன்?
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 'ஏரா' எலெக்ட்ரிக் பைக் மாடலை வெளியிட்டது மேட்டர் எனர்ஜி நிறுவனம். 5000 மற்றும் 5000+ என இரண்டு வேரியன்ட்களாக வெளிானது மேட்டர் ஏரா.
விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை!
செவ்வாய்கிழமை (மே30) ஹரித்வாருக்கு வந்த மல்யுத்த வீரர்கள் பாரதிய கிசான் யூனியன் மற்றும் விவசாயத் தலைவரான நரேஷ் திகைத்தின் தலையீட்டிற்குப் பிறகு, தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசாமல் திரும்பினர்.
FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.10,000 கோடி மதிப்பிலான FAME-II (Faster Adoption and Manufacturing of Electric Vehicles) திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.
தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
2023 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது உறவினர்கள் நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(மே-26) தள்ளுபடி செய்தது.
புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு
டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்றம் கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் என்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்
வரும் ஞாயிற்று கிழமை புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று(மே 24) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக உறுதியளித்தார்.
கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் செல்போன் நம்பர் கேட்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவினை புறக்கணிக்கும் திமுக, விசிக
புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.
மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று(மே 23) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தனர்.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு தீர்வாணையம் மூலம் நடக்கும் யுபிஎஸ்சி தேர்வுமுடிவுகள் இன்று(மே.,23)வெளியாகியுள்ளது.
இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து, இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 முதல் ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்
"இந்தியா: தி மோடி கொஸ்டின்" ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது குஜராத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு(NGO) ஒன்று அவதூறு வழக்கை தொடர்ந்திருக்கிறது.
நாட்டில் 8 புதிய நகரங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவின் தற்போதுள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கடிக்கு தீர்வுக்காக புதியதாக 8 நகரங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி
புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு
மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகள் மற்றும் CGHS ஆரோக்கிய மையங்கள்/பாலிகிளினிக்குகளில் வேலை செய்யும் மருத்துவர்கள் பொதுவான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்
மத்திய அரசு அறிவுறுத்தல்படி, சாலை போக்குவரத்தினை கண்காணித்து விபத்துகளை தவிர்க்க புதிய திட்டத்தினை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொள்ளவுள்ளார்கள்.
பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு
திமுக'வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா நினைவுச்சின்னம் ஒன்றினை ரூ.81 கோடி செலவில் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது.
தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!
தொலைந்த அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுபிடிக்கவும், அதனை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கும் வகையிலும் உதவக்கூடிய புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு.
மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC!
மும்பை கடல் பகுதியில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பு கண்டறியப்பட்டுள்ளாதக அறிவித்திருக்கிறது மத்திய அரசு நிறுவனமான ONGC (Oil and Natural Gas Corporation).
டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி அரசு மற்றும் அதன் லெப்டினன்ட் கவர்னருக்கு இடையேயான அதிகார பிரச்சனைகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லி அரசுக்கு சார்பாக இன்று(மே 11) தீர்ப்பளித்துள்ளது.
ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு
ஒரே பாலின திருமண விவகாரம் தொடர்பாக ஏழு மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 10) தெரிவித்துள்ளது.
அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு!
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்னும், அவை வந்த சில ஆண்டுகள் வரையிலும், எல்லா ஃபோன்களிலும் FM ரேடியோ இருந்தது.
இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், அதனை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது.
2027-ம் ஆண்டு முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைக்கும் மத்திய அமைச்சகம்!
2027-ம் ஆண்டு முதல் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மற்றும் அதிகம் மாசடைந்த நகரங்களில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் எண்ணெய் வளத்துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் நாளை முதல் மீன்பிடிக்க செல்லலாம் - மீன்வளத்துறை
கடலில் உள்ள உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தடை விதிக்கிறது.
மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு
மணிப்பூர் மாநிலத்தில் நடந்துவந்த வன்முறை அதன் தலைநகர் இம்பாலுக்கு பரவியதையடுத்து, வன்முறையாளர்களை "பார்த்தவுடன் சுட வேண்டும்" என மணிப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் காமன்வெல்த் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற அவினாஷ் சேபிள் மற்றும் தேஜஸ்வின் ஷங்கர் ஆகியோருக்கு வெளிநாட்டில் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.