இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், அதனை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் இட ஒதுக்கீடு ரத்தினை அமல்படுத்த கூடாது என்று கர்நாடகா மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு அம்மாநில அரசும் ஒப்புதல் தெரிவித்த நிலையில், இந்த வழக்கானது நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடஒதுக்கீடானது ரத்து செய்யப்பட்டு விட்டது.
மதசார்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
வழக்கு
அரசியல் தலைவர்கள் கவனத்துடன் பேச வேண்டும் என்று அறிவுரை
இந்நிலையில் இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு இன்று(மே.,9) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது இஸ்லாமியர் இட ஒதுக்கீடு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அதனை குறித்து பொது வெளியில் எப்படி பேசலாம்? என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அமித்ஷா இது குறித்து பேசியது தவறு என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீட்டினை அரசியலாக்க முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியில் பேசும் பொழுது கவனத்துடன் பேச வேண்டும் என்று அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.