ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் நாளை முதல் மீன்பிடிக்க செல்லலாம் - மீன்வளத்துறை
கடலில் உள்ள உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தடை விதிக்கிறது. இந்த காலத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தினை பாதுகாக்க இந்த சட்டமானது கொண்டுவரப்பட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைகாலமானது கடந்த ஏப்ரல் 16ம் தேதி துவங்கி வரும் ஜூன் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் நாளை(மே.,9) முதல் ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் தகுந்த பாதுகாப்புடன் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்று தமிழக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மேலும் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகில் சென்று மீன் பிடிக்க அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.