Page Loader
புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு 
புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு

புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு 

எழுதியவர் Nivetha P
May 25, 2023
04:42 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்றம் கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் என்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ராஜபாதை சீரமைப்பு, மத்திய செயலகம், பிரதமர் இல்லம், துணை குடியரசு தலைவர் இல்லம்ஆகியவைகளை உள்ளடக்கி புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக பிரதமர் மோடி கொண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இதன் கட்டுமான பணிகள் துவங்கியது. தற்போது இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் வரைப்படங்கள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து வரும் 28ம் தேதி மோடி அவர்கள் இதனை திறந்துவைக்கவுள்ள பட்சத்தில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திறப்பு விழா 

திறப்பு விழாவை புறக்கணிப்பதில் மாற்றம் இல்லை - எதிர்க்கட்சிகள் 

இந்நிலையில் அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தனது ட்விட்டரில், ஜனாதிபதி நாட்டின் தலைவராவார்,அரசின் தலைவர் பிரதமர். இவர் அரசுச்சார்பாக பாராளுமன்றம் நிகழ்வினை வழிநடத்துகிறார். ஜனாதிபதி இருஅவையிலும் உறுப்பினராக இல்லாமல் உள்ளநிலையில், பிரதமர் உறுப்பினராகவுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இச்சூழலில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல்காங்கிரஸ் உள்ளிட்ட பலதரப்பட்ட 19 கட்சிகள் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து விழாவினை புறக்கணிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. புதிய நாடாளுமன்றத்தினை குடியரசுத்தலைவர் தான் திறக்கவேண்டும். பிரதமர் அல்ல என்று அவர்கள் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இம்முடிவினை எடுத்துள்ளனர். அவர்களின் இம்முடிவினை திரும்பப்பெறும்படி, மத்தியஅமைச்சர் பிரகலாத்ஜோஷி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நாட்டின் பாராளுமன்ற கட்டிடத்தினை நாட்டின் ஜனாதிபதி திறந்து வைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று(மே.,25)பொதுநலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.