Page Loader
புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி 
புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி

புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி 

எழுதியவர் Nivetha P
May 19, 2023
11:56 am

செய்தி முன்னோட்டம்

புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடமாகும். இதன் காரணமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்ட மத்தியஅரசு முடிவுச்செய்தது. அதன்படி, ராஜபாதை சீரமைப்பு, மத்தியச்செயலகம், பிரதமர் இல்லம்,துணை குடியரசுத்தலைவர் இல்லம்ஆகியவைகளை உள்ளடக்கி புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்ட்ரல்விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக பிரதமர்மோடி கொண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இதன் கட்டுமானப்பணிகள் துவங்கியது. டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனம் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்டியுள்ளது. தொடர்ந்து இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டிடத்தின் வரைபடங்கள் வெளியிடப்பட்டது.

மோடி 

ஜனநாயக பெருமையினை பறைசாற்றும் விதமாக பிரம்மாண்ட அரசியல் சட்ட மண்டபம்

இந்நிலையில் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் வரும் 28ம்தேதி திறக்கப்படுகிறது என்று மத்தியஅரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டிடத்தினை பிரதமர் மோடி அவர்கள் திறந்துவைக்கவுள்ளார். தற்போதுள்ள லோக் சபாக்கட்டிடத்தில் 543பேரும், ராஜ்ய சபாவில் 250பேரும் உட்கார இடவசதியுள்ள நிலையில், கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் ராஜ்யசபா கட்டிடத்தில் 300பேர் உட்காரும் வண்ணம் இடவசதி உள்ளது. மேலும் லோக் சபாவில் கூட்டுக்கூட்டத்தினை நடத்த ஏதுவாக 1,280எம்.பி.க்கள் அமரும் வண்ணம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த புதியக்கட்டிடத்தில் இந்தியாவின் ஜனநாயக பெருமையினை பறைசாற்றும் விதமாக பிரம்மாண்ட அரசியல் சட்ட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக்குழுக்களுக்கான அறைகள், விசாலமான வாகன நிறுத்தம், உணவு அருந்தும் பகுதி ஆகியன இடம்பெற்றுள்ளது.