
யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி
செய்தி முன்னோட்டம்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு தீர்வாணையம் மூலம் நடக்கும் யுபிஎஸ்சி தேர்வுமுடிவுகள் இன்று(மே.,23)வெளியாகியுள்ளது.
இதில் அகில இந்தியளவில் முதல் 3 இடங்களை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அளவில் முதலிடத்தினை சென்னை பெரம்பூர் பகுதியினை சேர்ந்த மாணவி ஜீஜீ என்பவர் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ளப்பேட்டியில், எனது சிறு வயதிலிருந்து பத்திரிகையாளராக வேண்டும் என விரும்பினேன்.
அதிகளவில் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கமும் எனக்கு உள்ளதால் உலகச்செய்திகளை அதிகம் படித்து தெரிந்துக்கொள்வேன்.
எனது ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படியும், பெற்றோரின் ஆதரவுடனும் எனது படிப்பினை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன்.
முழு கவனத்துடன், ஒரு ஆண்டு கஷ்டப்பட்டு படித்தால் நிச்சயம் முதல் முயற்சியிலேயே தேர்வு பெறலாம் என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | "பத்திரிகையாளராக வேண்டும் என விரும்பினேன், செய்தித்தாள் வாசிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம், இதுதான் என்னை இத்தேர்வில் தேர்ச்சி பெற உதவியது..!”
— Sun News (@sunnewstamil) May 23, 2023
- UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவி ஜீஜீ பேட்டி#SunNews | #UPSCResults | #ChennaiTopperGirl pic.twitter.com/drYEwlLqXw