Page Loader
மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்
இந்த ஆவணப்படம் 2023ஆம் ஜனவரி மாதம் பிரிட்டனில் வெளியானது.

மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்

எழுதியவர் Sindhuja SM
May 22, 2023
03:04 pm

செய்தி முன்னோட்டம்

"இந்தியா: தி மோடி கொஸ்டின்" ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது குஜராத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு(NGO) ஒன்று அவதூறு வழக்கை தொடர்ந்திருக்கிறது. அந்த NGO தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் இன்று(மே 22) பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2002 குஜராத் கலவரம் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "இந்த ஆவணப்படம் நாடு மற்றும் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், பிரதமருக்கு எதிரான அவதூறான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், ஜாதிகளை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும்...," என்று தெரிவித்திருக்கிறது. NGO சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த ஆவணப்படம் நீதித்துறைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக வாதிட்டார்.

DETAILS

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு தடை விதித்த மத்திய அரசு

இந்த ஆவணப்படம் 2023ஆம் ஜனவரி மாதம் பிரிட்டனில் வெளியானது. இந்தியாவில் வெளியாகவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பற்றி வெளியான இந்த பிபிசி ஆவண படத்திற்கு இந்தியாவில் பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. 2002 கலவரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படத்தை இந்திய அரசாங்கம் தடை செய்தது. சமூக ஊடக நிறுவனங்களிடம் இந்த ஆவணப்படத்தின் இணைப்பை அகற்றுமாறு கேட்டு கொண்டதன் மூலம் இந்த ஆவணப்படத்தின் பரவலை இந்திய அரசு அப்போது கட்டுப்படுத்தி இருந்தது. இந்த நடவடிக்கையை அப்பட்டமான "சென்சார்ஷிப்"(தணிக்கை) என்று எதிர்க்கட்சிகள் சாடின. இந்நிலையில், இந்த ஆவணப்படத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.