Page Loader
மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டம், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது.

மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

எழுதியவர் Sindhuja SM
May 23, 2023
07:22 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று(மே 23) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தனர். 'இன்று டெல்லியில் நடந்தது, நாளை வேறு எந்த எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்திலும் நடக்கலாம்' என்பது அவர்களது இந்த சந்திப்பின் நோக்கமாக இருந்தது. டெல்லி அதிகாரிகளின் சேவைகளுக்கான அதிகாரத்தை மாற்றும் மத்திய அரசின் மசோதா ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட்டால், அது "2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய வெற்றியாக இருக்கும்" என்று டெல்லி முதல்வர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, மாநிலங்களவையில் மத்திய அரசின் மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி வருகிறார்.

details

ஆளுநர் பெரும் தடையாக இருக்கிறார் என்று தமிழக முதல்வர் என்னிடம் கூறினார்: அரவிந்த் கெஜ்ரிவால்

"இந்த அடிகாரத்திற்கான போராட்டம் டெல்லியைப் பற்றியது மட்டுமல்ல. மேற்கு வங்க ஆளுநரும் அதைத்தான் செய்கிறார். பகவந்த் மான் கூட அதைத்தான் குற்றம் சாட்டுகிறார். பல மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு தடையாக ஆளுநர் இருப்பதாக தமிழக முதல்வர் என்னிடம் கூறினார்." என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் மக்களால் தேர்ந்தேகப்பட்ட அரசிற்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்றும், துணைநிலை ஆளுநர் மாநில அரசாங்கத்தின் பேச்சை கேட்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டம், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது. இதற்கு எதிராக தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறார்.