
நாட்டில் 8 புதிய நகரங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் தற்போதுள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கடிக்கு தீர்வுக்காக புதியதாக 8 நகரங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் 'நகர்புறங்கள்-20' என்னும் ஜி20 கூட்டமைப்பின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறங்கள் மேம்பாட்டு துறை பங்கேற்றனர்.
அப்போது ஜி 20 பிரிவின் இயக்குனர் எம்.பி.சிங் பேசினார்.
அவர் பேசியதாவது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் நகரங்கள் உள்ளன என்று கூறினார்.
மத்திய அரசு
15வது நிதி ஆணையத்தின் அறிக்கையில் பரிந்துரை
மேலும் அவர் பேசுகையில், புகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி, நகரத்தின் அடிப்படை கட்டமைப்பு திட்டத்தை பாதிப்பதாக உள்ளது.
நாட்டில் புதிய நகரங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என 15வது நிதி ஆணையத்தின் அறிக்கை ஒன்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில அரசுகள் அனுப்பியுள்ள 26 புதிய நகரங்கள் குறித்த முன்மொழிவுகள் ஆராயப்பட்டது.
அதனுள் 8 நகரங்களை மேம்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நகரங்களுக்கான இடங்கள், அவற்றை உருவாக்குவதற்கான கால அளவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.
புதிய நகரங்கள் உருவாகும் போது, 200 கிமீ., சுற்றளவு பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் முன்னேற்றம் அடையும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.