Page Loader
தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2023
05:10 pm

செய்தி முன்னோட்டம்

2023 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் கேலோ இந்தியா கேம்ஸ் 2023 நடத்த வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விளையாட்டுகள் அனைத்து இந்திய மாநிலங்களிலும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் களமாக இருக்கும். 44வது செஸ் ஒலிம்பியாட்டின் போது அனைவரும் கண்டது போல், தமிழ்நாடு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தகுந்த கம்பீரத்துடன் நடத்தி, தமிழர்களின் விருந்தோம்பல் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்." என தெரிவித்துள்ளார்.

khelo india games 2023

கேலோ விளையாட்டு போட்டிகளின் பின்னணி

இந்தியாவில் நீண்ட காலமாக கிரிக்கெட் மட்டுமே பிரபலமான விளையாட்டாக இருந்து வந்த நிலையில், மற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பதக்கம் வெல்லும் திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிந்து பயிற்சி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இத்தகைய இளம் வீரர்களை கண்டறியும் நிகழ்வாகவே கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள், பல்கலைக்கழக விளையாட்டுகள் மற்றும் குளிர்கால விளையாட்டுகள் என மூன்று வடிவங்களில் 2018 முதல் நடத்தப்பட்டு வருகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மிழ்நாட்டில் நடக்க உள்ள நிலையில், போட்டியை செப்டம்பர் முதல் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், விரிவான அட்டவணை இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.