Page Loader
பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 
பிராண்டட் மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 

எழுதியவர் Sindhuja SM
May 16, 2023
06:21 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகள் மற்றும் CGHS ஆரோக்கிய மையங்கள்/பாலிகிளினிக்குகளில் வேலை செய்யும் மருத்துவர்கள் பொதுவான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. டைரக்டர் ஜெனரல் ஹெல்த் சர்வீசஸ்(DGHS) வெளியிட்டுள்ள அலுவலக உத்தரவில், "மத்திய அரசு மருத்துவமனைகள் /CGHS ஆரோக்கிய மையங்கள்/பாலிகிளினிக்குகளில் உள்ள அனைத்து மருத்துவர்களும் பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்குமாறு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்." என்று கூறப்பட்டுள்ளது.

DETAILS

உத்தரவை  யாரேனும் மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அரசு 

" எனினும், சில சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள்(ரெஸிடெண்ட்கள் உட்பட) பிராண்டட் மருந்துகளை தொடர்ந்து பரிந்துரைக்கின்றனர். இவை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களாலும் கவனிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்." என்று மேலும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த அலுவலக உத்தரவை யாரேனும் மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால், அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அவரே பொறுப்பாவார்" என்றும் அந்த உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிலநேரம் வேறு வழியில்லாமல் பிராண்டட் மருந்துகளை தான் பரிந்துரைக்க வேண்டி இருக்கிறது என்று மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா நோய்களுக்கும் பொது மருந்துகள் கிடைப்பதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். பொதுவான மருந்துகள் என்பது பிராண்டட் மருந்துகளுக்கு சமமானவையே. ஆனால், பிராண்டட் மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.