
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு அறிவுறுத்தல்படி, சாலை போக்குவரத்தினை கண்காணித்து விபத்துகளை தவிர்க்க புதிய திட்டத்தினை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொள்ளவுள்ளார்கள்.
அதிக வேகம், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறுவது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல், இதர வாகனங்களை முந்தி செல்லுதல், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்லுதல் போன்ற பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து குறிப்பிட்ட வாகனங்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 15 நாட்களுக்குள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே அபராதம் விதிக்க புதிய நடைமுறை வரவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் மின்னஞ்சல், குறுந்தகவல் அல்லது நேரில் அபராத சீட்டானது கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
விபத்து
காவலர்கள் தங்கள் உடலில் கேமராக்களை பொருத்திக்கொண்டு கண்காணிப்பு
சம்பந்தப்பட்டவர்கள் அந்த அபராத சீட்டில் உள்ள தொகையினை இணையம் வழியாகவோ, போக்குவரத்து காவல் நிலையங்களிலேயோ செலுத்தலாம்.
குற்றம்சாட்டப்பட்ட போது உரிமையாளர் தனது வாகனத்தினை செலுத்தவில்லை என்றால் அவர் காவல்துறை அதிகாரி அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் முன் உரிய ஆதாரத்துடன் தன்னை நிரபராதி என்று உரிமை கோரலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் காவலர்கள் தங்கள் உடலில் கேமராக்களை பொருத்திக்கொண்டும்,
போக்குவரத்து காவல் வாகனங்களில் டேஷ் போர்டில் பொருத்தப்படும் கேமராவை பொருத்தியும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என்று அரசிதழில் திட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.