புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவினை புறக்கணிக்கும் திமுக, விசிக
செய்தி முன்னோட்டம்
புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.
தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் என்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, ராஜபாதை சீரமைப்பு, மத்திய செயலகம், பிரதமர் இல்லம், துணை குடியரசுத்தலைவர் இல்லம் ஆகியவைகளை உள்ளடக்கி பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020ம்ஆண்டு டிசம்பரில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக பிரதமர் மோடி கொண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இதன் கட்டுமானப்பணிகள் துவங்கியது.
தற்போது இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் வரைப்படங்கள் வெளியிடப்பட்டது.
வரும் 28ம்தேதி திறப்புவிழாவினையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புறக்கணிப்பு
இறுதிக்கட்ட முடிவினை வெளியிடும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள்
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதிய பாராளுமன்றத்தினை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டும். பிரதமர் அல்ல என்று தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சியிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அது ஏற்கப்படவில்லை.
இதனால் முறையாக அழைப்பிதழ் கிடைத்தப்பிறகு புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவினை கூட்டாக புறக்கணிப்பது குறித்து இன்று(மே.,24) இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சார்பில் அறிக்கை வெளியாகவுள்ளது என்று கூறப்படுகிறது.
அதன்படி சில எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கவுள்ளார்கள்.
தமிழ்நாட்டில், திமுக கட்சியும் இவ்விழாவினை புறக்கணிக்கப்போவதாக திமுக எம்.பி. திருச்சி சிவா அறிவித்துள்ளார். திருமாவளவன் தலைமையிலான விசிகவும் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.