Page Loader
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்திய ஓலா நிறுவனம்.. எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது?
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்திய ஓலா

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்திய ஓலா நிறுவனம்.. எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 01, 2023
12:35 pm

செய்தி முன்னோட்டம்

FAME-II திட்டத்தின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் பைக்குளின் பேட்டரி அளவில் ஒரு kWh-க்கு ரூ.15,000 வீதம், ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தின் விலையில் 40% வரை மானியம் வழங்கி வந்தது மத்திய அரசு. இதனால் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மானிய விலையில் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து, அந்த மானியத்தை அரசிடம் பெற்றுக் கொள்ள முடிந்தது. கடந்த மாதம் இந்த மானியத்தை ஒரு kWh-க்கு ரூ.10,000-ஆகவும், வாகனத்தில் விலையில் 15%-ஆகவும் மானியத்தைக் குறைந்தது மத்திய அரசு. இந்த புதிய அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. எனவே, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தத் தொடங்கியிருக்கின்றன.

ஓலா

விலையை உயர்த்தி ஓலா: 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டர் எனர்ஜி நிறுவனம் தங்கள் எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.30,000 வரை உயர்த்தி நிலையில், தற்போது ஓலா நிறுவனமும் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தியிருக்கிறது. 3kWh பேட்டரி கொண்ட ஓலா S1 மாடலின் விலை ரூ.15,000 வரை உயர்த்தப்பட்டு, இனி ரூ.1,30,000 விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. அதேபோல், ஓலா S1 ப்ரோவின் விலையும் ரூ.15,000 உயர்த்தப்பட்டு, ரூ.1,40,000 விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. ஆனால், ஓலா தங்களின் தொடக்கநிலை S1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தவில்லை. 2kWh, 3kWh மற்றும் 4kWh பேட்டரி அளவு கொண்ட S1 ஏர் ஸ்கூட்டர்கள், ரூ.84,999, ரூ.99,999 மற்றும் ரூ.1.10 லட்சம் என்ற விலைகளிலேயே விற்பனை செய்யப்படவிருக்கின்றன.