தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் காமன்வெல்த் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற அவினாஷ் சேபிள் மற்றும் தேஜஸ்வின் ஷங்கர் ஆகியோருக்கு வெளிநாட்டில் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கான முழு செலவையும் விளையாட்டு அமைச்சகம் ஏற்கும். இதன்படி வீரர்களின் விமான கட்டணம், விசா கட்டணம், மருத்துவக் காப்பீடு, உள்ளூர் போக்குவரத்து செலவுகள், போர்டிங் & தங்கும் கட்டணம் மற்றும் அவுட் ஆஃப் பாக்கெட் அலவன்ஸ் ஆகியவற்றை அரசு ஏற்கும். தமிழகத்தைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின், பிரவீன் சித்திரவேல் மற்றும் டி.செல்வ பிரபு ஆகியோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கு விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.