வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு
இந்தியா சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவையின் அடிப்படையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு விலையினை நிர்ணயம் செய்து வருகிறது. மத்திய அரசு சமையல் எரிவாயுக்கான மானியத்தினை குறைத்ததால் வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சிலிண்டரின் விலையானது நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2,021.50க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த மாதமும் விலை குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்
அதன்படி, தற்போது இம்மாத நிலவரப்படி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.84.50 குறைக்கப்பட்டு, ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,937க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வணிகம் செய்வோர் மத்தியில் பெரும் வரவேற்பினையும், மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து 14 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.1,180.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.171 குறைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடவேண்டியவை.
இந்த காலவரிசையைப் பகிரவும்