Page Loader
நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை 
நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை

நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை 

எழுதியவர் Nivetha P
Aug 16, 2023
07:23 pm

செய்தி முன்னோட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில் அரசு பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு அண்மை காலமாக எடுத்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதுமுள்ள 169 நகரங்களில் 10,000 மின்சாரப்பேருந்துகளை ரூ.57,619கோடி செலவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இன்று(ஆகஸ்ட்.,16)நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 'பிரதம மந்திரி இ-பாஸ் சேவா'என்னும் இத்திட்டத்திற்கு ரூ.20,000கோடி மத்திய அரசு வழங்கும் நிலையில், மீத தொகை அந்தந்த மாநில அரசுகள் செலுத்தவேண்டும் என்றும் இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மின்சார பேருந்துகளின் கொள்முதல் மற்றும் பராமரிப்பு பணிகள் PPP என்னும் அரசு-தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

மின்சார பேருந்துகள் கொள்முதல்