13 Mar 2024

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு சத்தீஸ்கரில் இருந்து வடக்கு உள் கர்நாடகம் வரை நிலவுகிறது.

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து; மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக தலைவர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததை அடுத்து, அவரது அமைச்சர் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளது.

சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு

புதன்கிழமை, மார்ச் 13, 2024 அன்று பங்குச் சந்தை கடுமையாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர்.

'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு சமம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மேற்கத்திய நாடுகளை எச்சரித்தார்.

'ராஹி' இ-ரிக்ஷாவை இந்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 

பெங்களூரை தளமாகக் கொண்ட EV தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 'ராஹி' எனப்படும் புதிய மின்சார ரிக்ஷாவை வெளியிடத் தயாராகி வருகிறது.

விரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகிறது என இணையத்தில் தகவல்

மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகலாம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

#RCBUnbox: அணியின் பெயர் மாறவிருக்கிறதை குறிப்பால் உணர்த்திய ரிஷப் ஷெட்டி 

ஐபிஎல்2024 தொடருக்கு முன்னதாக ஆர்சிபி அணி தங்களது அணியின் பெயரை மாற்றவுள்ளனர்.

குடியரசு தலைவர் ஒப்புதல்: சட்டமானது உத்தரகாண்டின் பொது சிவில் சட்டம் 

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்ட்ராவா செயலி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஸ்ட்ராவா என்பது ஒரு சோஷியல் நெட்ஒர்க் மற்றும் உலகளாவிய விளையாட்டு வீரர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொபைல் பயன்பட்டு செயலி ஆகும்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் புதிய ஹரியானா முதல்வர் நயாப் சைனி

நேற்று பதவியேற்ற புதிய ஹரியானா அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூருவை வாட்டி வதைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு 

பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அந்த நகரத்தில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் 2-வது சுற்றிற்கு முன்னேறிய பி.வி.சிந்து; அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு

நடப்பு நிதியாண்டு முதல், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது தமிழக அரசு.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எஸ்பிஐ

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) இன்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

ப்ரேமலு திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் ட்ரைலர் வெளியானது

இந்தாண்டு மலையாளத்தில் வெளியான இரு திரைப்படங்கள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்று மஞ்சும்மேல் பாய்ஸ், மற்றொன்று ப்ரேமலு.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது 

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று கைது செய்தது.

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி சென்னையில் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியை சென்னையில் கைது செய்துள்ளது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.35% உயர்ந்து $72,113.83க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 11.12% உயர்வாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 13

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

சிஏஏ குடியுரிமை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் சிஏஏ குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து

பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

தொழிலதிபரை கரம் பிடித்தார் 'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நடிகை நிலா

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த, 'அன்பே ஆருயிரே' அறிமுகம் ஆனவர் நடிகை நிலா.

அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன் 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 13, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

"விஜய்-யின் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது": நடிகர் விஷால் பதிவு

நடிகர் விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக, ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கி இருந்தார்.

10ஆம் வகுப்பு பொது தேர்வில் மாற்றம்: தமிழ் மொழி பாடத்திலிருந்து விலக்கு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழை தாய்மொழியாக கொண்டிராத சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் போது நடந்தது என்ன? விவரிக்கிறார் அஸ்வின்

ராஜ்கோட்டில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, தனது தாயாருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையை சமாளிக்க, கேப்டன் ரோஹித் ஷர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் எப்படி உதவினார்கள் என்பதை அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

12 Mar 2024

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்கு இணங்க, பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) இன்று மாலை தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

மக்களவை தேர்தலுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் 

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.

போர்ஷே டெய்கன் டர்போ ஜிடியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை 

போர்ஷே தனது சக்திவாய்ந்த மாடலான 2025 டெய்கன் டர்போ ஜிடியை வெளியிட்டுள்ளது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அவரது 5வது திரைப்படம்

பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் தனது 5வது திரைப்படத்தை இயக்க உள்ளார்.

விமானப்படையின் தேஜாஸ் விமானம் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எல்சிஏ தேஜாஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கு முன் விமானி பத்திரமாக வெளியேறினார்.

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றார் பாஜக தலைவர் நாயப் சிங் சைனி

எம்.எல் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றுள்ளார்.

'தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்': முதலமைச்சர் ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உறுதியளித்துள்ளார்.

ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) 2024யில் விளையாட ரிஷப் பந்த் முழு உடல் தகுதி உடையவர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

பாஜகவுடன் இணைந்தது நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்துள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 4.89% உயர்ந்து $71,865.43க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 6.42% உயர்வாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 12

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

ஹரியானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார் 

ஹரியானாவில் ஆளும் பாஜக-ஜனநாயக்க ஜனதா கட்சி(ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனோகர் லால் கட்டார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம்

புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், மார்ச் 14 முதல், பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தில் செல்ல முடியும்.

காங்கிரஸ் கட்சியில் அமைதியின்மை: மக்களவை தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடமாட்டார் என தகவல் 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 12, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.