ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவிப்பு
இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) 2024யில் விளையாட ரிஷப் பந்த் முழு உடல் தகுதி உடையவர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. 14 மாதங்களாக மறுவாழ்வு சிகிச்சையில் இருந்த ரிஷாப் பந்த், புதிய ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக பயிற்சியைத் தொடங்கி இருக்கிறார். டெல்லி கேபிடல்ஸ் முகாமில் சேர அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் பிரசித் கிருஷ்ணா இந்த சீசனில் டி20 லீக்கில் பங்கேற்க முடியாது என்பதை பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உடற்தகுதியை பெற கடுமையாக உழைத்த ரிஷப் பந்த்
2022 டிசம்பரில், ரிஷாப் பந்த்துக்கு கார் விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அவர் முற்றிலும் விலகிவிட்டார். அதன் பின், சில மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். பின்னர் தனது உடற்தகுதியை மேம்படுத்தி IPLயில் விளையாட பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில்(NCA) சேர்ந்து, கடுமையாக உழைத்தார். டிசம்பர் 30, 2022 அன்று உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு அருகில், உயிருக்கு ஆபத்தான சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, 14 மாதம் மறுவாழ்வு சிகிச்சை பெற்ற, ரிஷப் பந்த் தற்போது வரவிருக்கும் TATA IPL 2024க்கான விக்கெட் கீப்பர் பேட்டராகத் தகுதி பெற்றுள்ளார்.