Page Loader
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அவரது 5வது திரைப்படம்

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அவரது 5வது திரைப்படம்

எழுதியவர் Sindhuja SM
Mar 12, 2024
04:48 pm

செய்தி முன்னோட்டம்

பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் தனது 5வது திரைப்படத்தை இயக்க உள்ளார். 2018இல் பரியேறும் பெருமாள் என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கி மாரி செல்வராஜ் மிகவும் பிரபலமானார். அதை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கினார். அந்த திரைப்படமும் ரசிகர் மத்தியில்பாராட்டை பெற்றது. இந்நிலையில், கடைசியாக அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படமும் பெரிதளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது அவர் நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரை வைத்து தனது புதிய படத்தை இயக்க உள்ளார். கபடியை கதைக்களமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்க இருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

5வது திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் மாரி செல்வராஜ்