NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன் 

    அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2024
    09:47 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் போட்டியிட உள்ளனர்.

    ஜோ பைடன், ஜனநாயக கட்சியையும், டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர்.

    ஏற்கனவே அவர்கள் இருவரும் தங்கள் கட்சிக்குள் தங்களுக்கு போட்டியாக இருந்த வேட்ப்பாளர்களை தோற்கடித்துவிட்டனர்.

    மேலும், அதிபர் வேட்பாளர்களாக ஆவதற்குத் தேவையான பிரதிநிதிகளை அவர்கள் மிசிசிப்பி, வாஷிங்டன் மற்றும் ஜார்ஜியா மாநிலங்களில் பெற்றுள்ளனர்.

    அமெரிக்கா 

    "நாட்டின் எதிர்காலத்தை  வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்": ஜோ பைடன் 

    அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய, ஒரு மறைமுக தேர்தல் அல்லது முதன்மை தேர்தல் அமெரிக்காவில் பொதுவாக நடத்தப்படுகிறது

    அந்த தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொரு கட்சிக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறார்கள். அதன் பிறகு, அந்த பிரதிநிதிகள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

    இதற்காக நடத்தப்படும் மாநாட்டில், ஒவ்வொரு கட்சியின் அதிபர் வேட்பாளர்களும் வேட்புமனுவை வெல்வதற்கு அவர்களுக்கு பெரும்பான்மையான பிரதிநிதி வாக்குகள் தேவை.

    "இந்த நாட்டின் எதிர்காலத்தை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் எழுந்து நின்று நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போகிறோமா அல்லது மற்றவர்கள் முன்னிலையில் அதைக் கிழிக்கப் போகிறோமா?" என்று தனது வெற்றிக்குப் பிறகு ஜோ பைடன் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஜோ பைடன்
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில் கனடா
    வீடியோ: நடுவானில் காற்றோடு பறந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு; பரபரப்பான சூழலில் அவசர தரையிறக்கம்  விமானம்
    அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து  விமானம்

    ஜோ பைடன்

    ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐநா சபை
    போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு ஹமாஸ்
    நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன இஸ்ரேல்
    இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ்

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025