பெங்களூருவை வாட்டி வதைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு
செய்தி முன்னோட்டம்
பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அந்த நகரத்தில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
புறநகர் பாபுசபாளையாவில் வசிப்பவர்கள் தங்களின் தினசரி தண்ணீர் தேவைக்கு தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்கிறார்கள். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக அந்த தண்ணீர் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
"எங்களுக்கு தினசரி நான்கு டேங்கர்கள் தேவைபடுகிறது. ஆனால் தற்போது ஒன்று அல்லது இரண்டு மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது. கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக நாங்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்," என்று அப்பகுதியை சேர்ந்த ஒரு குடியிருப்பாளர் கூறியுள்ளார்.
தண்ணீர் பிரச்சனை காரணமாக சிலர் குளிக்கக்கூட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கடந்த மாதத்தில் 5 முறை மட்டுமே தான் குளித்ததாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர்
பெங்களூரில் மழை இல்லாததால், தண்ணீர் பற்றாக்குறை
காவிரி ஆற்று நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகிய இரண்டு ஆதாரங்களில் இருந்து பெங்களூருக்கு முதன்மையாக தண்ணீர் கிடைக்கிறது.
குடிநீர் அல்லாத பயன்பாடுகளுக்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்படுகிறது.
இப்போது சிறிது காலமாக பெங்களூரில் மழை இல்லாததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பெங்களூருக்கு தினசரி 2,600-2,800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது,
இது தற்போதைய சப்ளை தேவையில் இருந்து 2 மடங்காகும். இதனால் நகரவாசிகள் தினமும் தண்ணீருக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்படி தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருவதால், பிற மாநிலத்தை சேர்ந்த பெங்களூரு வாசிகளுக்கு தங்களுக்கு வீட்டில் இருந்தே பணி புரியும் வாய்ப்பு வேண்டும் என்று கோரி வருகின்றனர்.