Page Loader
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி சென்னையில் கைது
ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி சென்னையில் கைது

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி சென்னையில் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 13, 2024
12:32 pm

செய்தி முன்னோட்டம்

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியை சென்னையில் கைது செய்துள்ளது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு. அவரை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் கடத்தல் வழக்கில், காவல்துறையினராலும், போதை பொருள் தடுப்பு அதிகாரிகளாலும் தேடப்பட்டு வந்த திமுக பிரமுகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையில், ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஜாபர் சாதிக் கூட்டாளி கைது