
கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மம்ப்ஸ் வைரஸைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவுவது கடுமையாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில் மட்டும் அந்த மாநிலத்தில் 2,500 பரவல்கள் பதிவாகியுள்ளன.
மார்ச் 10ஆம் தேதி அன்று ஒரே நாளில் 190 பரவல்கள் அம்மாநிலத்தில் பதிவாகியது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 11,467 வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.
மலப்புரம் மாவட்டம் மற்றும் பிற வடக்கு பகுதிகளில் இந்த காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது.
எனவே, இது போன்ற தொற்றுகளின் மாதிரிகளை சேகரித்து PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் நோய் பரவலைக் கண்காணிக்கும் பணியை சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.
கேரளா
மம்ப்ஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள்
மம்ப்ஸ் என்பது பாராமிக்ஸோவைரஸால் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். பாதிக்கப்பட்ட நபரின் மேல் சுவாசக் குழாயில் இருந்து தும்மல், இருமல் மூலம் வரும் நீரின் மூலம் மற்றவர்களுக்கும் இது பரவுகிறது.
இந்த தொற்று நோய் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் பரவக்கூடியது.
இந்த நோய் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு மம்ப்ஸ்-தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை போட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கம் மற்றும் வலி, லேசான காய்ச்சல், தசை வலி, பசியின்மை, பொது அசௌகரியம் மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
நோய்த்தொற்று ஏற்பட்டு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.