10ஆம் வகுப்பு பொது தேர்வில் மாற்றம்: தமிழ் மொழி பாடத்திலிருந்து விலக்கு
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழை தாய்மொழியாக கொண்டிராத சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. அந்த மாணவர்கள் இனி தமிழ் தேர்வு எழுதுவது கட்டாயம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், "தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வரும் 26-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் இருந்தே விலக்கு அளிக்கப்படுகிறது". "எனினும், இந்த விலக்கு நடப்பு ஆண்டு தேர்வுக்கு மட்டும் பொருந்தும். தமிழ் தேர்வுக்கு பதிலாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய சிறுபான்மை பிரிவு மாணவர்கள், அவர்களுடைய மொழி பாடத்தை தேர்வாக எழுதி கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.