ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றார் பாஜக தலைவர் நாயப் சிங் சைனி
செய்தி முன்னோட்டம்
எம்.எல் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றுள்ளார்.
ஹரியானா முதல்வராக இருந்த பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை இன்று காலை பதவி விலகியதை அடுத்து, ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்பார் என்று அக்கட்சி இன்று பிற்பகல் தெரிவித்தது.
இன்று(மார்ச் 12) மாலை 5 மணிக்கு அவரது பதவியேற்பு விழா தொடங்கியது.
கட்டார் மற்றும் ஹரியானா-இன்சார்ஜ் பிப்லாப் தேவ் முன்னிலையில் நயாப் சிங் சைனி முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா
ஹரியானாவில் பாஜக கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்புகள்
மக்களவைத் தேர்தலுக்கான சீட் பகிர்வு உடன்பாட்டை எட்டத் தவறியதனால், பாஜக மற்றும் ஜேஜேபி இடையேயான உறவுகள் மோசமடைந்தன.
அதனால், எம்எல் கட்டார் தனது அமைச்சரவையையும் ராஜினாமா கடிதத்தையும் இன்று காலை ஹரியானா ஆளுநரிடம் ஒப்படைத்தார்.
அதனை தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியது.
ஹரியானா மாநில சட்டசபையில் 45 இடங்கள் இருந்தால் ஒரு கட்சி பெருமபான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.
தற்போது, 41 பாஜக எம்எல்ஏக்களும், அது போக சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்று பாஜக கூறியுள்ளது.
எனவே, மாநில பாஜக தலைவர் நைப் சிங் சைனி, எம்.எல் கட்டாருக்குப் பதிலாக முதல்வராக பதவியேற்றார்.