
சிஏஏ குடியுரிமை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சிஏஏ குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
சட்டம் இயற்றப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு இது அமலுக்கு வந்துள்ளது.
எனினும் இதற்கு, விஜய்யின் தமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
CAA படி, இந்தியக் குடியுரிமை பெற, ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய குடியுரிமை பெற, அதன் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://indiancitizenshiponline.nic.in சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
குடியுரிமைச் சட்டம், 1955-ன் கீழ், இந்தியக் குடிமகனை மணந்தவர், இந்தியக் குடிமகனின் குழந்தைகள் போன்ற வழக்குகளில் ஒருவர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
இது தவிர, குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியாவில் வசித்த வெளிநாட்டு விண்ணப்பதாரர்களும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
குடியுரிமை
குடியுரிமை வழங்க ஆட்சியர் ஒப்புதல் வழங்குவார்
படிவத்தில் தகவல்களை பதிவேற்றிய பிறகு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
அனைத்து செயல்முறைகளையும் முடித்தபிறகு, MHA கோப்பு எண் வழங்கப்படும்.
இதை குறித்து வைத்து கொள்ளுங்கள். இந்த எண் மூலமாகவே உங்கள் விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
அதன் பின்னர், உங்கள் தகவல்களுக்கு, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, ஆன்லைனில் கட்டணம் செலுத்தவும்.
பின்னர், உங்கள் விண்ணப்பத்திற்கு ஏற்ற படிவம் X/ படிவம் XI/படிவம் XII, அதையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தகவல்கள் சரிபார்க்கப்பட்டு பிறகு, உங்களுக்கு அதிகாரபூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்படும்.
இந்த கடிதம் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை, உங்கள் ஊர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
அதன் பின்னரே மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட இந்திய குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்படும்.