Page Loader
தொழிலதிபரை கரம் பிடித்தார் 'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நடிகை நிலா
நடிகை நிலாவின் இயற்பெயர் மீரா சோப்ரா

தொழிலதிபரை கரம் பிடித்தார் 'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நடிகை நிலா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 13, 2024
10:22 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த, 'அன்பே ஆருயிரே' அறிமுகம் ஆனவர் நடிகை நிலா. இவர், தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவாலை, நேற்று, மார்ச் 12ஆம் தேதி ஜெய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டார். நடிகை நிலாவின் இயற்பெயர் மீரா சோப்ரா. இவர் பிரபல பாலிவுட் நடிகைகள், பிரியங்கா சோப்ரா மற்றும் பரீனிதி சோப்ராவின் உறவினர் ஆவார். இவரின் திருமணம், ஜெய்ப்பூரில் உள்ள பியூனா விஸ்டா சொகுசு கார்டன் ஸ்பா ரிசார்ட்டில் நடைபெற்றது. இந்த திருமண விழாவின் புகைப்படங்களை இருவரும் தற்போது பகிர்ந்துள்ளனர். அவர்களின் திருமணத்திற்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை நிலா, 'அன்பே ஆருயிரே' படத்திற்கு பிறகு, மருதமலை, காளை போன்ற படங்களிலும், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தொழிலதிபரை கரம் பிடித்தார் நடிகை நிலா