Page Loader
'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நிலாவிற்கு விரைவில் டும்..டும்..டும்
'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நிலாவிற்கு விரைவில் திருமணம்

'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நிலாவிற்கு விரைவில் டும்..டும்..டும்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 31, 2024
05:44 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த 'அன்பே ஆருயிரே' அறிமுகம் ஆனவர் நடிகை நிலா. இவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியாகிவுள்ளது. நடிகை நிலாவின் இயற்பெயர் மீரா சோப்ரா. பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் பரீனிதி சோப்ராவின் உறவினர் இவர். 'அன்பே ஆருயிரே' படத்திற்கு பிறகு, மருதமலை, காளை போன்ற படங்களிலும், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த பின்னர், ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அதன் பின்னர் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தவர், தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இவரது திருமணமும் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இதற்கு பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோருக்கும் அழைப்பு விடுதிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

நிலாவிற்கு விரைவில் திருமணம்