Page Loader
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம்
தமிழக அரசு சார்பாக இதனை தலைமையேற்று நடத்தி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 13, 2024
09:36 am

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதோடு பொள்ளாச்சி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில், 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று முதல்வர், அரசு சார்பாக இதனை தலைமையேற்று நடத்தி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார் முதல்வர். அங்கிருந்து, காலை 10.45 மணிக்கு, சாலை மார்க்கமாக விழா மேடையை வந்தடைகிறார் மு.க.ஸ்டாலின். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஸ்டாலின், 509 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகளையும் திறந்து வைக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்