
'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு சமம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மேற்கத்திய நாடுகளை எச்சரித்தார்.
"இராணுவ-தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம்," என்று கூறிய அவர், ஆனால் இப்போது அதற்கான தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்று இன்னும் 6 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார் என்று நம்பப்படுகிறது.
ரஷ்யா
'ரஷ்யாவின் அணுசக்தி நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை': வெள்ளை மாளிகை
ரஷ்யா அல்லது உக்ரைனுக்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்பினால், அது ஒரு பெரிய தலையீடாகவே பார்க்கப்படும் என்று புதின் எச்சரித்துள்ளார்.
எனினும், ரஷ்ய-அமெரிக்க உறவுகளை சீரான நிலையில் வைத்திருக்க அமெரிக்க வல்லுநர்கள் கடுமையாக உழைத்து வருவதால் அணு ஆயுத போருக்கு அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஷ்யா எதற்கும் தயாராக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கைகள் அமெரிக்காவில் கவலைகளை எழுப்பியுள்ளன. ஆனால் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் அணுசக்தி நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கவனிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.