நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் புதிய ஹரியானா முதல்வர் நயாப் சைனி
செய்தி முன்னோட்டம்
நேற்று பதவியேற்ற புதிய ஹரியானா அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று வெற்றி பெற்றுள்ளது.
புதிய ஹரியானா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள நயாப் சிங் சைனி இன்று சட்டசபையின் சிறப்பு அமர்வின் போது நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.
மக்களவைத் தேர்தலுக்கான சீட் பகிர்வு உடன்பாட்டை எட்டத் தவறியதனால், பாஜக மற்றும் ஜேஜேபி இடையேயான உறவுகள் மோசமடைந்தன.
அதனால், ஹரியானா முதல்வராக இருந்த எம்எல் கட்டார் தனது அமைச்சரவையையும் ராஜினாமா கடிதத்தையும் நேற்று காலை ஹரியானா ஆளுநரிடம் ஒப்படைத்தார்.
அதனை தொடர்ந்து, ஹரியானாவின் குருக்ஷேத்ரா மக்களவை எம்பியான நயாப் சிங் சைனி, நேற்று ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து, ஹரியானாவில் ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார்.
ஹரியானா
'மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்': முதல்வர் சைனி
அதன் பிறகு, புதிய ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி நேற்று மாலை பதவியேற்றார்.
புதிய ஹரியானா முதல்வராக நியமிக்கப்பட்ட பிறகு பேசிய முதல்வர் சைனி , "இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, யூனியன் எச்எம் அமித் ஷா மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். சபாநாயகரிடம் நாளை காலை 11 மணிக்கு விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளோம். 48 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்து ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறினார்.
அதன் படி, இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.