Page Loader
பாஜகவுடன் இணைந்தது நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி

பாஜகவுடன் இணைந்தது நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி

எழுதியவர் Sindhuja SM
Mar 12, 2024
01:31 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்துள்ளது. மக்கள் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெறும் என சரத்குமார் கணித்துள்ளார். அவர் இன்னும் பிரச்சாரத்தில் இறங்கவில்லை என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நம்புகிறார். இந்தியா டுடேவிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி மீதுள்ள நம்பிக்கையால் அதிமுகவுடன் முன்பு இருந்த கட்சிகள் கூட்டணிக்காக பாஜகவை நோக்கி செல்கின்றன. தமிழகத்தில் என்டிஏ 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பாஜகவுடன் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி