ப்ரேமலு திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் ட்ரைலர் வெளியானது
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான இரு திரைப்படங்கள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்று மஞ்சும்மேல் பாய்ஸ், மற்றொன்று ப்ரேமலு. இந்த இரு திரைப்படங்களும் மலையாளத்தில் 100 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ப்ரேமலு படத்தின் தெலுங்கு பதிப்பும் சமிபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. RRR படத்தின் இயக்குனர் ராஜமௌலி இந்த படத்தை பற்றி சிலாகித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இரு தினங்களுக்கு முன்னர் தெலுங்கு படவுலகில் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, இந்த திரைப்படம், தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான், இப்படத்தை தமிழில் டப்பிங் செய்து, மார்ச் 15 வெளியிடுகிறது ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம்.