போர்ஷே டெய்கன் டர்போ ஜிடியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
போர்ஷே தனது சக்திவாய்ந்த மாடலான 2025 டெய்கன் டர்போ ஜிடியை வெளியிட்டுள்ளது. இலகுரக வெய்சாச் டிராக் பேக்கேஜ் மூலம், இந்த கார் பூஜ்ஜியத்திலிருந்து 95.5 கிமீ வரையிலான வேகத்தை வெறும் 2.1 வினாடிகளில் எட்டிவிடும். அதனால், இதற்கு முன்பு அறிமுகமான பிற போர்ஷ் கார்களை விட இந்த காரால் வேகமாக பயணிக்க முடியும். டெய்கன் டர்போ ஜிடி ஆனது ஒரு புதுமையான பல்ஸ் இன்வெர்ட்டரைக் கொண்டுள்ளது, இது சிலிக்கான் கார்பைடைப் பயன்படுத்தி பின்பக்க மோட்டாருக்கு 900 ஆம்ப்ஸ் வரை வழங்குகின்றது. அது, ஒரு புதிய இலகுவான பின்புற-அச்சு மோட்டாரின் உதவியுடன், காரின் வேகம் மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது.
அம்சங்கள் மற்றும் எடை குறைப்பு நடவடிக்கைகள்
கார்பன் ஃபைபர் கூறுகள் மற்றும் இலகுவான சக்கரங்கள் உள்ளிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தி இந்த மாடலில் எடை குறைப்பு நடவடிக்கைகளை போர்ஷே மேற்கொண்டுள்ளது. பின்புற இருக்கைகளை கார்பன் ஃபைபர் ஷெல்ஃப் மூலம் மாற்றியதன் மூலம் இந்த மாடலின் எடை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, டர்போ ஜிடி, அதன் முன்னோடியான டர்போ எஸ்ஸை விட 71.2 கிலோ வரை எடை குறைந்த ஒரு மாடலாகும். வெதர்டெக் ரேஸ்வே லகுனா செகா பாதையை 1:27.87 மணிநேரத்தில் கடந்து டெய்கன் டர்போ ஜிடி ஏற்கனவே ஒரு பெரிய சாதனைகளை படைத்துள்ளது.